This Article is From Jul 13, 2020

திரும்பி வாருங்கள்.. நாம் இதனை சரிசெய்வோம்.. சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் அழைப்பு!

Rajasthan Crisis: எதிர்கட்சியான பாஜக சச்சின் பைலட்டுடன் இணைந்து தலையிட முயற்சிக்கும் பட்சத்தில் மேலும் பல எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 

Rajasthan: திரும்பி வாருங்கள்.. நாம் இதனை சரிசெய்வோம்.. சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் அழைப்பு!

ஹைலைட்ஸ்

  • Differences will be resolved "at a party forum," said Randeep Surjewala
  • Sachin Pilot last evening had claimed that he has backing of 30 MLAs
  • Mr Pilot told NDTV this morning that he "is not going to join the BJP"
Jaipur:

ராஜஸ்தான் அரசு பெரும்பான்மை இழந்துள்ளதாக துணை முதல்வர் சச்சின் பைலட் கூறிய நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் பங்கேற்று, சச்சின் பைலட்டின் கருத்தை பொய் ஆக்கியுள்ளனர். இதையடுத்து, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக மோதலில் சச்சினுடன் 10 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது. 

சுயோட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் அரசு தற்போது வரை பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கொண்டுள்ளது. எனினும், எதிர்கட்சியான பாஜக சச்சின் பைலட்டுடன் இணைந்து தலையிட முயற்சிக்கும் பட்சத்தில் மேலும் பல எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 

தொடர்ந்து, இன்று காலை நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பெரும்பான்மையானோர் கலந்துகொண்டதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறும்போது, பைலட்டுடன் தொடர்ந்து, சுமூக பேச்சுவார்த்தையையே எதிர்பார்க்கிறோம். எங்களிடம் பேசுங்கள். உங்களுக்காக எங்களது கதவுகள் திறந்தே உள்ளன. 

கடந்த சனிக்கிழமையன்று டெல்லி சென்ற பைலட்டை சோனியாவும், ராகுலும் சந்திக்கவில்லை என்று தெரிகிறது. எனினும், அவர்கள் அவருடன் வழக்கமாக நெருங்கிய தொடர்பில் இருக்க கூடியவர்கள். கருத்து வேறுபாடுகளை சரி செய்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

எனினும், இன்று காலை தான் பாஜகவில் இணையப்போவதில்லை என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 

.