‘விவசாய பட்ஜெட், கல்விக்கு 6% ஜிடிபி!’- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை #Highlights

தலைநகர் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS

Manifesto of Congress 2019: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.


New Delhi: 

Congress manifesto: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் அமல் செய்வது குறித்துப் பேசி வருகிறார்.

குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 72,000 ரூபாய் குறைந்தபட்ச ஊதியத் திட்டம், முறைபடுத்தப்பட்ட மற்றும் எளிமையான ஜி.எஸ்.டி வரி முறை, அரசுத் துறையில் காலியாக இருக்கும் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்படும் என்னும் வாக்குறுதி, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமல் செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறி வருகிறார்.

இந்நிலையில் தலைநகர் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 

தேர்தல் அறிக்கை குறித்து நிகழ்ச்சியின் போது உரையாற்றிய ராகுல், ‘இந்த அறிக்கையை ஓராண்டுக்கு முன்னர் தயாரிக்க ஆரம்பித்தபோது, நான் எனது கட்சிக்காரர்களிடம் சொன்னேன், மக்களின் விருப்பங்களை இது பிரதிபலிக்க வேண்டும் என்று. ஒரேயொரு விஷயத்தை மட்டும்தான் நான் அவர்களிடம் கோரிக்கையாக வைத்தேன். அறிக்கையில் சொல்லப்படும் அனைத்தும் உண்மையானதாக இருக்க வேண்டும் என்றேன். பொய் இருக்கவே கூடாது என்று கூறினேன். 

நாங்கள் அட்சிக்கு வந்தால், ரயில்வே துறைக்கு தனியாக பட்ஜெட் இருந்தது போல, விவசாயத்துக்கும் தனியாக ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 

மோடிஜி, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்றார். அது ஒரு பொய் என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், நாங்கள் ஏழைக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்கிறோம். இதற்கு 5 ஆண்டுகளில் 3,60,000 ரூபாய் செலவாகும். 

நாட்டில் பெரும் செல்வந்தர்களும் கார்ப்பரேட்களும் கடன் வாங்கிவிட்டு தப்பித்துச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் விவசாயிகள் சிறைக்குச் செல்கிறார்கள். விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் இனி அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது, சிவில் குற்றமாகவே கருதப்படும். 

கல்வித் துறைக்கு 6 சதவிகித ஜிடிபி தொகை ஒதுகப்படும். 

நாட்டில் எங்கும் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. பிரதமர் மோடி தோற்றுவிட்டார். அவர் மறைந்து கொள்ளலாம். ஆனால், அவரால் ஓட முடியாது. 

மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் சாத்தியமில்லை என்று பாஜக சொன்னது. அவர்களுக்கு வேண்டுமானால் அது சாத்தியமில்லாமல் போகலாம். காங்கிரஸ் அதைச் செய்து காட்டியது' என்று பேசினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................