This Article is From Nov 11, 2019

உண்மையைக் கண்டு அச்சம் கொள்கிறது பாஜக; விவசாயிகளை ஒடுக்குவது ஏன்?- கொந்தளித்த பிரியங்கா!!

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் மாநில வாரியாக விவசாயிகள் தற்கொலை விவரம் இடம்பெறவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இதனை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

உண்மையைக் கண்டு அச்சம் கொள்கிறது பாஜக; விவசாயிகளை ஒடுக்குவது ஏன்?- கொந்தளித்த பிரியங்கா!!

விவசாயிகளின் பொருளுக்கு சரியான விலையை அரசு அளிக்க வேண்டும் என பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

New Delhi:

உண்மையைக் கண்டு பாஜக அச்சம் கெள்வதாகவும், பாஜக ஆட்சியில் இருக்கும்போதுதான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். 

சமூக வலைதளங்கள் மூலமாக மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். 

கடந்த சில நாட்களாக பிரியங்காவின் ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழியில்தான் அதிக தகவல்கள் பகிரப்படுகின்றன. இந்த நிலையில், விவசாயிகள் பிரச்னையை குறிப்பிட்டு பேசியுள்ள பிரியங்கா பாஜக ஆட்சியில்தான் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

தேசிய குற்ற ஆவண காப்பகம் தனது அறிக்கையில் சில மாற்றங்களை செய்திருப்பதாகவும், அதன்படி விவசாயிகளின் தற்கொலையை மாநிலங்கள் வாரியாக வெளியிடவில்லை என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இதனை குறிப்பிட்டு பிரியங்கா தனது ட்விட்டர் பக்கங்களில் கூறியிருப்பதாவது- 

பாஜக ஏன் உண்மையைக் கண்டு இவ்வளவு அச்சம் கொள்கிறது? பாஜக ஆட்சியில் இருக்கும்போதுதான் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. 

விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அவர்களது தற்கொலை விவரங்களை வெளியிடாமல் இருப்பதுதான் நல்லது என்று கருதுகிறது. விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும். 

பாஜக ஆட்சியில் விவசாயிகளின் நிலைமை எப்படி இருக்கிறது? வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் இங்குள்ள விவசாயிகளுக்கு அவர்களது வெங்காயத்திற்கான நியாயமான விலை வழங்கப்படவில்லை.

8 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வெங்காயம் பெறப்பட்டு அவை மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் என்னதான் நடக்கிறது?.
இவ்வாறு பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 

.