This Article is From Jul 16, 2020

தகுதி நீக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ராஜஸ்தான் எம்.எல்.ஏக்கள்!

தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு அளிப்பது குறித்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தகுதி நீக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ராஜஸ்தான் எம்.எல்.ஏக்கள்!

அவர் முதல்வராக பதவி உயர்வு பெறுவது சம்பந்தப்படாத ஒரு தீர்மானத்தை சச்சின் பைலட் நிராகரித்துள்ளார்.

Jaipur:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களாக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. மாநிலத்தின் துணை முதல்வரான சச்சின் பைலாட் சில ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதல்வருக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தியுள்ளார். இந்நிலையில் அவர் பா.ஜ.கவில் இணைவதாக செய்திகள் வந்ததை பைலாட் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். ஆயினும் டெல்லிக்கு அருகே உள்ள குர்கானில் உள்ள ஹோட்டலில் அவர், புதியதாக அறைகளை முன்பதிவு செய்து வருவதாக தகவல்கள் வந்திருந்தன.

இந்த தகவல்களை மேற்கொள் காட்டி, சச்சின் பைலாட் உள்நோக்கத்துடன் மீண்டும் காங்கிரஸ் தலைமையிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அவர் மீதமிருக்கும் எம்.எல்.ஏக்களையும் தனது கிளர்ச்சி குழுவில் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியில் கருத்துகள் பரவி வருகின்றன. சோனியாக காந்தி அல்லது வேறு எந்த காங்கிரஸ் தலைவர்களுடனும் அவர் சந்திப்பினை நடத்த முன்வரவில்லை என்றாலும், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா இருவரும் கடந்த சில நாட்களில் அவரை அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழப்பம் விளைவிக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்படும் என அறிவிப்பு வெளியான பின்னரும், பைலாட் பாஜகவுடனான கூட்டணி குறித்த கருத்துக்களை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

இந்த தகுதி நீக்க நடவடிக்கையானது, தற்போது முதல்வராக இருக்கும் அசோக் கெலோட் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் அதற்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தும். போதிய எம்.எல்.ஏ ஆதரவு இல்லையெனில் மாநிலத்தில் ஆட்சி வீழ்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

திடீரென மாநில முதல்வருக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தி குழுவாக பிரிந்து சென்றதற்கு முறையாக காரணத்தை நாளைக்குள் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கொடுக்கவில்லையெனில் அவர்களின் தகுதி நீக்க நடவடிக்கை உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு அளிப்பது குறித்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொடர்பாக ஜூலை 20 வரை நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி தனது வழக்கை விசாரிக்க பைலட் கேட்டார். ஆனால் அது "நெறிமுறையாக இருக்காது" என்று கூறப்பட்டதாக தெரிய வருகிறது.

.