This Article is From Jul 21, 2018

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது!

15 ஆண்டுகள் கழித்து இன்று நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது

ஹைலைட்ஸ்

  • தெலுங்கு தேசம் கட்சிதான், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது
  • பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு
  • இன்றைய நாள் உரையாடலைப் பொறுத்தது, காங்கிரஸ்
New Delhi:

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தது. எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசி முடித்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் அவர் பேசுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், எதிர்கட்சியினர் அதிக நேரம் பேச எடுத்துக் கொண்டதால், 9 மணி அளவில் தன் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது எதிர்கட்சிகள் முன்வைத்த  பல்வேறு குற்றச்சாட்டுக்கு அவர் விளக்கமளித்து 1மணி நேரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் இருந்த 451 எம்.பி-க்களில் தீர்மானத்துக்கு எதிராக 325 உறுப்பினர்கள்  வாக்களித்துள்ளனர். அதே போல நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 126 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதனால், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ரஃபேல் ஒப்பந்தம் முதல் நாட்டின் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசினார் ராகுல். அவர் பேசும்போது, பாஜக எம்.பி-க்கள் பலர் கூச்சலிட்டனர். தனது உரையின் முடிவில் ராகுல், 'நீங்கள் என்னை பப்பு என்றழைக்கலாம். ஆனால், உங்கள் மீது எனக்கு எந்த வித வெறுப்பும் இல்லை. இது தான் ஒரு இந்துவாக இருப்பது என்று நான் கூறுவேன்' என்று சொல்லி, மோடியின் இருக்கைக்கு வந்து அவரை ஆரக்கட்டித் தழுவினார். இதையடுத்து பாஜக தரப்பு, ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து உரையாடல் நாடாளுமன்றத்தில் ஆரம்பமானவுடன், நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. இது அரசுக்கு சாதகமாக மாறியுள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் தரப்பில், 'இது நம்பிக்கை வாக்கெடுப்பைப் பொறுத்தது அல்ல. நடக்கப்போகும் உரையாடலைப் பொறுத்ததுதான்' என்று கூறியது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்கவேயில்லை. நேற்று அமித்ஷா, தாக்கரேவுடன் பேசியதாகவும், அதனால் சிவசேனாவின் ஆதரவு அரசுக்கு இருக்கும் என்றும் பாஜக தெரிவித்தது. இந்நிலையில், சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்காதது அரசுக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு இன்றைய தினம் முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது. 

தெரிந்துகொள்ள வேண்டிய 10 ஃபேக்ட்ஸ்,

ஒழுக்கமான, முழுமையான, இடையூறு அற்ற விவாதத்தை இன்று நடத்த வேண்டும். நாம் மக்களுக்கும் நமது சட்ட சாசனத்தை இயற்றியவர்களுக்கும் ஆற்றும் கடமை அது என்று இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

பாஜக இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கண்டிப்பாக வென்றுவிடும் அளவுக்கு பலம் இருக்கிறது. இருப்பினும், தோழமை கட்சிகளை இணைத்துக் கொண்டு 75 சதவிகித வாக்கு பலம் தனக்கு இருப்பதை பாஜக நிரூபிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. 

‘இன்று நடப்பது ஒரு போர். 2019 நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இது முன்னோட்டமாக இருக்கும்’ என்று அகாலி தளம் கட்சியின் நரேஷ் குஜரால் கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் தரப்பு, ‘எங்களுக்கு போதுமான வாக்கு சதவிகிதம் இல்லை என்று யார் கூறியது?’ என்று பூடகமாக கருத்து கூறியுள்ளது.

சீதாராம் யெச்சூரியோ, ‘மத்திய அரசை கேள்விக்குள்ளாக்கும் நோக்கில் தான் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது’ என்றுள்ளார்.

மொத்தம் இருக்கும் 533 எம்.பி-க்களில், தேஜகூ-விற்கு 312 எம்.பி-க்கள் கைவசம் இருக்கின்றன. பெரும்பான்மையை நிரூபிக்க 267 பேர் வேண்டும். 11 இடங்கள் காலியாக இருக்கின்றன. 

காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு 152 எம்.பி-க்கள் மட்டுமே உள்ளன.

பாஜக-வின் வெகுநாள் கூட்டாளி சிவசேனாவும், அதற்கு ஆதரவாக வாக்கெடுப்பில் நடந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் அமித்ஷா பேசிய பிறகு, நிலைமை சற்று சாதகமாக இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும் இன்று காலை 10 மணிக்கு தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிவசேனா கூறியுள்ளது.

பிஜூ ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்த்து வருவதாக அக்கட்சியின் பினாகி மிஸ்ரா கூறியுள்ளார். இதைவைத்துப் பார்க்கும் போது, அந்தக் கட்சி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது என்று யூகிக்கப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு, ஆந்திராவிற்கு சிறப்புப் பொருளாதார அந்தஸ்து கோரி, அது கொடுக்கபடாததற்குப் பின்னர் தான், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

சென்ற முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வராத வண்ணம் பாஜக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு: பிரதமர் முக்கிய கருத்து!

.