கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்!

'சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்’

கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்!

'அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும்..'

தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழைக் காலம் நிலவி வருவதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் தகவல்படி, தமிழகத்தில் தென் மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழையும்,

அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். 

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.