This Article is From Jan 11, 2020

விழுங்கிய ப்ளாஸ்டிக் பாட்டிலை வயிற்றிலிருந்து வெளியே கொண்டுவரும் நல்ல பாம்பு! 48 Sec Video!

விழுங்கிய ப்ளாஸ்டிக் பாட்டிலை நல்ல பாம்பு ஒன்று மிகுந்த சிரமப்பட்டு வெளியே கொண்டு வருகிறது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

விழுங்கிய ப்ளாஸ்டிக் பாட்டிலை வயிற்றிலிருந்து வெளியே கொண்டுவரும் நல்ல பாம்பு! 48 Sec Video!

ப்ளாஸ்டிக் பாட்டிலை வெளியே கொண்டு வந்த பாம்பு.

விழுங்கிய ப்ளாஸ்டிக் பாட்டிலை நல்லபாம்பு ஒன்று மிகுந்த சிரமப்பட்டு வயிற்றிலிருந்து வெளியே கொண்டு வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் அதிக எண்ணிக்கையில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வீடியோவை வனத்துறை அதிகாரியான பிரவீன் கஸ்வானும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மொத்தம் 48 வினாடிகள் ஓடக்கூடியதாக இந்த வீடியோ அமைந்துள்ளது. ஏற்கனவே நல்ல பாம்பு ப்ளாஸ்டிக் பாட்டிலை விழுங்கியிருக்கிறது. அதனை என்னவாக நினைத்து பாம்பு விழுங்கியது என்பது தெரியவில்லை.

இதன்பின்னர் மிகுந்த சிரமப்பட்டு வெளியே கொஞ்சம் கொஞ்சமாக பாட்டிலை கொண்டு வருகிறது நல்ல பாம்பு. இதனை சுற்றிலும் நின்றுகொண்டு பொதுமக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். 

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள வனத்துறை அதிகாரி கஸ்வான், ப்ளாஸ்டிக் பொருட்களை கண்டபடி இதுபோன்ற குப்பைகளில் போடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக்கால் உயிரினங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன என்று கேட்டு கஸ்வான் விமர்சித்திருக்கிறார். 

ப்ளாஸ்டிக்கை நல்ல பாம்பு விழுங்கியதால்தான் வெளிக் கொண்டு வர முடிந்தது என்று கூறியுள்ள கஸ்வான், மற்ற உயிரினங்கள் இதை விழுங்கியிருந்தால் அவை உயிரிழந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

வீடியோவை பார்க்க...
 

:

இந்த வீடியோ இன்று காலை ட்விட்டரில் பகிரப்பட்டது. மிக குறுகிய நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை வீடியோ கடந்திருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் இதுபற்றி கமென்ட் செய்துள்ளனர். 

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் டன் ப்ளாஸ்டிக்குகள் வெளியேற்றப்படுகின்றன. இவற்றில் 40 சதவீத ப்ளாஸ்டிக்குகள் சேகரிக்கப்படாமல் சுற்றுப்புறத்தை மாசுபடுத்திக் கொண்டிருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Click for more trending news


.