This Article is From Aug 19, 2018

தமிழக வெள்ள பாதிப்பு இடங்களை முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது

தமிழக வெள்ள பாதிப்பு இடங்களை முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு

பவானி: (பிடிஐ) கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிரம்பியதாகல், 2 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது

இதைப் போல, பவானி சாகர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றுத் தண்ணீரும் கலப்பதால் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு பவானி, நாமக்கல் குமாரபாளையம் ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளன. இதனால் ஈரோடு மாவட்டம் ஆற்றங்கரையோரம் உள்ள 7,832 மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெள்ள பாதிப்புகளுக்கு 263 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குமாரபாளையம், பவானி போன்ற காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், விஜய பாஸ்கர் ஆகியோர் முதலமைச்சருடன் இருந்தனர்.

.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.