This Article is From Nov 01, 2019

போனில் பேசியபடி தண்டவாளத்தில் விழுந்த பெண் : அதிர வைக்கும் வீடியோ

“பயணி நன்றாக இருக்கிறார்” என்று மெட்ரோ டி மாட்ரிட் ட்விட்டர் வீடியோ பதிவுக்கு பிறகு குறிப்பிடப்பட்டுள்ளது.

போனில் பேசியபடி தண்டவாளத்தில் விழுந்த பெண் : அதிர வைக்கும் வீடியோ

பெண்ணொருவர் சரியாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் விழுந்து விடுகிறார்.

ஸ்பெயினில் பெண் பயணி ஒருவர் போனில் பேசியபடி ரயில் நெருங்கி வரும் போது ரயில் தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொலைபேசியில் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்த பெண்ணொருவர் சரியாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் விழுந்து விடுகிறார்.

உடனிருந்த பயணிகள் அப்பெண்ணுக்கு உதவ ஓடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆனால், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. இருப்பினும், சிபிஎஸ் செய்தியின்படி இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக பெண்ணுக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“பயணி நன்றாக இருக்கிறார்” என்று மெட்ரோ டி மாட்ரிட் ட்விட்டர் வீடியோ பதிவுக்கு பிறகு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோவை பாருங்கள்:

மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள், “உங்கள் பாதுகாப்பிற்காகவே கூறுகிறோம். நடைமேடையில் நடக்கும் போது மொபைலை தவிர்த்து விடுங்கள்” என்று ஸ்பானிஷ் மொழியில் பதிவு விட்டுள்ளனர். 

Click for more trending news


.