This Article is From Jun 13, 2018

பிரபல செஃப் விகாஸ் கண்ணா ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் ரமலான் நோன்பு இருப்பது ஏன் தெரியுமா?

ஒவ்வொரு வருடமும் புனித ரமலான் மாதத்தில் ஒரு நாள் நோன்பு இருந்து என்னை காப்பாற்றிய குடும்பத்தை நினைத்து நன்றி சொல்வேன்

பிரபல செஃப் விகாஸ் கண்ணா ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் ரமலான் நோன்பு இருப்பது ஏன் தெரியுமா?

Chef Vikas Khanna credits a Mumbai family with saving his life during the 1992 riots in Mumbai

ஹைலைட்ஸ்

  • என் குடும்பத்துடன் என்னை இணைத்து வைத்த அனைவருக்கும் நன்றி
  • இஸ்லாமிய குடும்பத்தினர் கலவரம் குறித்து எச்சரித்துள்ளனர்
  • இந்த அன்பான இணைப்பை கண்டு பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினர்
New Delhi: புதுடில்லி: கடந்த 26 ஆண்டுகளாக, செஃப் விகாஸ் கண்ணா புனித ரமலான் மாதத்தில் ஒரு நாள் நோன்பு இருந்து வருகிறார். 1992 ஆம் நடைப்பெற்ற மும்பை கலவரத்தில் தனது உயிரை காப்பாற்றிய இஸ்லாமிய குடும்பத்தை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செய்து வருகிறார். 26 ஆண்டுகளுக்கு பிறகு, கலவரத்தில் தன்னைக் காப்பாற்றிய குடும்பத்தை அவர் சந்தித்தார்.

கடந்த திங்கட்கிழமை அன்று, அந்த குடும்பத்தை சந்தித்தவுடன், “மனநிறைவான மாலை. கண்ணீர். வலி. பெருமை. தைரியம். மனித நேயம். நன்றி” என உணர்ச்சிகள் பொங்க தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு விகாஸ் கண்ணாவின் முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தது, “1992 ஆண்டு மும்பை சீராக் செரடான் ஹோட்டலில் பயிற்சி பெற்று கொண்டிருந்த போது, நகரில் கலவரம் வெடித்தது. ஹோட்டலிலேயே பல நாட்கள் மாட்டிக்கொண்டோம்.” என்று கூறியிருந்தார்.
 
 
 

கடந்த ஆண்டு, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேட்டியளித்த விகாஸ் கண்ணா, மும்பை கலவரத்தின் போது ஹோட்டலில் மாட்டிக் கொண்ட போது, எவரும் வெளியே செல்லவும் உள்ளே வரவும் அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

கலவரத்தின் ஒரு நாள், மும்பை கட்கோபர் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன், அங்கு வசிக்கும் தனது சகோதரரை பார்க்க சென்றார் விகாஸ் கண்ணா.

கட்கோபர் பகுதிக்கு செல்லும் வழியில், இஸ்லாமிய குடும்பத்தினர் கலவரம் குறித்து எச்சரித்துள்ளனர். அதனால், அந்த குடும்பத்தினரின் வீட்டினுள் நுழைந்துவிட்டதாக பேட்டியில் கூறினார்.

கலவர குழுவில் இருந்தவர்கள் வீட்டினுள் புகுந்து விசாரிக்கும் போது, “அவன் எங்கள் மகன்” என்று கூறி விகாஸ் கண்ணாவை காப்பாற்றியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு அந்த குடும்பத்தினருடன் தங்கியிருந்த விகாஸ் கண்ணா, அவரது சகோதரர் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளவும் உதவியதாக கூறினார்.

 
 
 


“அந்த ஆண்டு முதலே, ஒவ்வொரு வருடமும் புனித ரமலான் மாதத்தில் ஒரு நாள் நோன்பு இருந்து என்னை காப்பாற்றிய குடும்பத்தை நினைத்து நன்றி சொல்வேன்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 

ஜூன் 11 ஆம் தேதி அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில், “மன நிறைவான மாலை... என் குடும்பத்துடன் என்னை இணைத்து வைத்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.

இந்த அன்பான இணைப்பை கண்டு பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினர்.Click for more trending news


.