This Article is From Jan 31, 2019

''மத்திய பாஜக அரசு மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது'' - குடியரசு தலைவர் பேச்சு

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

''மத்திய பாஜக அரசு மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது'' - குடியரசு தலைவர் பேச்சு

16-வது மக்களவையின் கடைசி கூட்டத்தில் உரையாற்றியுள்ளார் குடியரசு தலைவர்.

ஹைலைட்ஸ்

  • பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 13-ம்தேதி வரை நடைபெறுகிறது
  • நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றினார்
  • மத்திய அரசின் திட்டங்களை விவரித்தா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
New Delhi:

மத்திய பாஜக அரசு மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். 

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடைக்கா பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு நாளை தாக்கல் செய்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது-

இந்தியாவுக்கு 2019-ம் ஆண்டு என்பது மிகவும் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஜாலியன் வாலாபாக் 100-வது நினைவு தினமும் இந்த ஆண்டில்தான் வருகிறது.

அரசியலமைப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டு 70- ஆண்டுகள் நிறைவு பெறுவதும் இந்த 2019-ல்தான். குருநானக்கின் 550-வது ஜெயந்தி இந்த ஆண்டில்தான் அனுசரிக்கப்படுகிறது. 
மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. ஏழை மக்களால் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியவில்லை. இதனை கவனத்தில் கொண்டுள்ள மத்திய அரசு ஆயுஷ்மான் இந்தியா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 
ஒரு ரூபாய்க்கு காப்பீடு செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும்  சுமார் ஒரு கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக மத்திய அரசு சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. 

தங்களது பிள்ளைகளக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும். வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. இதனை நிறைவேற்றும் வகையில் 7 ஐஐடி, 7 ஐஐஎம்., 14 ஐஐஐடி, ஒரு என்.ஐ.டி.உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களை மத்திய அரசு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அவர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களான உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். 

.