This Article is From Feb 04, 2019

மம்தா - சிபிஐ மோதல் விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறது

கொல்கத்தா போலீஸ் கமிஷ்னரிடம் விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரச்னை வெடித்தது.

மம்தா - சிபிஐ மோதல் விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறது

மேற்கு வங்க அரசுக்கு எதிராக சிபிஐ உச்ச நீதிமன்றத்தை நாடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைலைட்ஸ்

  • கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் ராஜிவ் குமாரை விசாரிக்க சென்றது சிபிஐ
  • பொன்ஸி ஊழலை விசாரிப்பதில் ராஜிவ் அலட்சியமாக இருந்தார் என புகார்
  • மேற்கு வங்க அரசு ஒத்துழைக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்வோம்: சிபிஐ
New Delhi:

மம்தா - சிபிஐ மோதல் விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு  செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா போலீஸ் கமிஷ்னரிடம் விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். 

சிபிஐ மூலம் மத்திய பாஜக அரசு அரசியல் செய்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். சிபிஐ விசாரணைக்கு எதிராக நேற்று அவர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு மாநில கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், மேற்கு வங்க விவகாரத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிபிஐ-யின் இடைக்கால தலைவர் நாகேஸ்வர ராவ் கூறுகையில், ''நாங்கள் ஏதும் குற்றம்  செய்தோமா?. நாங்கள் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார். 

மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீசாரும், சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் போலீஸ் தரப்பில் மாயமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் ராஜிவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில் அவர் ஆஜராகததால் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவுக்கு விசாரணைக்காக வந்தனர். அப்போதுதான் கைது, தர்ணா போராட்டங்கள் நடந்தன. 

.