This Article is From Sep 06, 2019

கூட்டணியின்றி காங்கிரஸ் வெற்றி பெற முடியாதா? கே.எஸ்.அழகிரி கேள்வி!

குறைந்த பட்சம் தெருவில் நடக்கும் தேர்தலிலாவது நாம் வெற்றி பெற முடியுமா?

கூட்டணியின்றி காங்கிரஸ் வெற்றி பெற முடியாதா? கே.எஸ்.அழகிரி கேள்வி!

கூட்டணியின்றி காங்கிரஸ் வெற்றி பெற முடியாதா?

கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் கூட்டணியின்றி தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதைப் பற்றி விவாதம் நடத்தவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா?

இது காமராஜரின் காங்கிரஸ். அவரது பெருமை என்னவென்று சொன்னால், அவர் தனி மனிதனாக இந்த மண்ணில் கால் பதித்தார். காங்கிரஸ் கட்சியின் மேடையை கூட சரிசெய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறோம். 

மற்ற கட்சிகளை போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது. குறைந்த பட்சம் தெருவில் நடக்கும் தேர்தலிலாவது நாம் வெற்றி பெற முடியுமா? இது போன்ற கேள்விக்கு பதில் கிடைக்க விவாதிக்க வேண்டும். இல்லாமல், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்து விடலாம் என நினைத்தால் அது நடக்கவே நடக்காது. 

தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும். தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், உயிர் நாடி. இங்கு கூட்டணியின்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

.