This Article is From Jan 06, 2020

டெல்லி ஜாமியா போரட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதா காவல்துறை? வீடியோ ஆதாரம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டதில் தென் டெல்லி பகுதியே போர்களமாக மாறியது.

Jamia Protest: போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

New Delhi:

கடந்த டிச.15ம் தேதி டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போரட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக போலீசார் தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக பெயர் கூறவிரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு அளித்த தகவலில், ஜாமியா போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் நிலைமை கையை மீறி போனதாக அச்சுறுத்தல் ஏற்பட்டத்தால் தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பராமரிக்கப்படும் தினசரி நாட்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல வீடியோக்களை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அது போன்ற ஒரு வீடியோவில் போலீசார் கை துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. 

மதுரா சாலையில் உள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் திரண்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். அப்போது, காவல்துறையினரை சூழந்த போராட்டக்காரர்கள் கற்களை கொண்டு கடும் தாக்குதல் நடத்தினர். அப்போது, ஒரு அதிகாரி தனது தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக அந்த மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தெற்கு டெல்லி பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசயதால், அவர்களை கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணர்புகைக்குண்டுகளை பயன்படுத்தினர். 

எனினும், இந்த வன்முறை சம்பவத்தின் போது, டெல்லி போலீசார் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், டெல்லி காவல்துறையினர் இதனை திட்டவட்டமாக மறுத்து வந்தனர். துப்பாக்கிச்சூடு காரணாமாக காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறிய நிலையிலும், அது கண்ணீர்புகைக்குண்டுகளின் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை தரப்பு தெரிவித்து வந்தது. 

இதனிடையே, போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் உடனடியாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, அது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. 

இதுதொடர்பான ஒரு வீடியோவில், போலீஸ்காரர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் காணமுடிந்தது. தொடர்ந்து, அவர் துப்பாக்கியை நீட்டிய படி ஒடுவதையும் அதில் காண முடிந்தது. மேலும், அந்த வீடியோவில், குறைந்தது நான்கு முறையாவது துப்பாக்கிச்சூடு நடக்கும் சத்தம் கேட்கிறது. 

அந்த வீடியோவானது, மற்றொரு செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவுடன் தொடர்புடையது. அதே பகுதியில் நடந்த அந்த வன்முறையின் போது, போராட்டக்காரர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து கீழே விழுகிறார். அந்த வீடியோவில் அந்த நபர் விழுவதற்கு முன்பு ஒரு காவல்துறை அதிகாரி அதில் கடந்து செல்கிறார். அந்த அதிகாரியே மற்றொரு வீடியோவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆவார். 

.