This Article is From Sep 02, 2020

செப்.7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! இனி எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம்!!

முன்னதாக நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்திற்கு மாநில அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
தமிழ்நாடு Written by

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 25.03.202 முதல் மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் சில தளர்வுகளை மாநில அரசு அனுமதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இ-பாஸ் முறையை ரத்து செய்தும், மாவட்டத்திற்குள் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று செப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படும் என்றும், பயணிகள் ரயில் சேவையும் செப். 7 முதல் தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் தனது தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு தளர்வுகளை அனுமதித்திருந்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசத்தினை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
Advertisement