This Article is From Jul 28, 2018

பேருந்து விபத்தில் 20 பல்கலைக்கழக ஊழியர்கள் பலி

மஹராஷ்டிரா உள்துறை அமைச்சர் வினோ டாவ்டே, சம்பவ இடத்துக்கு அதிகாரிகளை உடனே செல்ல உத்தரவிட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்

பேருந்து விபத்தில் 20 பல்கலைக்கழக ஊழியர்கள் பலி
Raigad:

மும்பையில் இருந்து கோவா செல்லும் மலைப் பாதையில் ரெய்காட் என்ற பகுதியில், வேளாண் கல்லூரி ஊழியர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.

கடந்த சில நாட்களாக மழை பொழிவு அதிகமாக இருந்த அந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பேருந்து நிலை தடுமாறி 500 அடி பள்ளத்துக்குள் விழுந்தது.

அந்த பேருந்தில் மொத்தம் 34 பேர் பயணம் செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. மஹராஷ்டிரா உள்துறை அமைச்சர் வினோ டாவ்டே, சம்பவ இடத்துக்கு அதிகாரிகளை உடனே செல்ல உத்தரவிட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து ரியாகாட் பகுதி காவல் அதிகாரி கூறுகையில், டாக்டர் பாலாசாஹேப் சவந்த் கொன்கன் கிருஷி வித்யாபீத் பல்கலைக்கழக ஊழியர்கள், வார இறுதியை கழிக்க பிக்னிக் சென்ற போது இந்த விபத்து நடந்திருப்பதாக தெரிவித்தார்.

விபத்தில் சிக்கிய ஒருவர், பள்ளத்தில் இருந்து மேலே வந்து, காவல் துறைக்கு தகவல் அளித்தவுடன், மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.

.