வரி விதிப்பால் உயர்ந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 2 ரூபாய் 30 காசுகளும், பெட்ரோலின் விலை 2 ரூபாய் 50 காசுகளும் அதிகரித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வரி விதிப்பால் உயர்ந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் மீது சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார்.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.
  2. கூடுதல் வரி போடப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  3. அதன்படி எரிபொருளின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது பெட் ரோல் மற்றும் டீசல் மீது  சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கும் என்று அறிவித்தார்.

 தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் கலால் வரியை உயர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றார். இது குறித்து நிதியமைச்சர், “சிறப்பு கூடுதல் உற்பத்தி மற்றும் சாலை வரியாக ஒரு ரூபாயும் உள்கட்டமைப்பும் செஸ் வரியாக ஒரு ரூபாயும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும்” என்றார்.  

அதன்படி நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் மீதான விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 2 ரூபாய் 30 காசுகளும், பெட்ரோலின் விலை 2 ரூபாய் 50 காசுகளும் அதிகரித்துள்ளது. 

மாநில அரசின் வரிகளுடன் சேர்த்து பெட் ரோல் விலை ரூ. 73.24 ஆக இருந்தத விலை ரூ. 75.79 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலை நேற்று ரூ. 68.01 என நேற்று விற்பனை செய்யப்பட்டது இன்று விலை உயர்வினால் 70.51 பைசா என இன்று விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் பெட் ரோல் விலை ரூ. 72.96 ஆகவும், டீசல் விலை ரூ. 66.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு பொதுமக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................