This Article is From Jul 09, 2019

ஆற்றுக்குள் தவறி விழுந்த தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றிய 11 வயது சிறுவன்!!

2 உயிர்களை காப்பாற்றிய சிறுவனை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். தேசிய அளவில் வீர தீரச் செயல் புரிந்ததற்கு சிறுவன் உத்தம் தாதியின் பெயர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. 

ஆற்றுக்குள் தவறி விழுந்த தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றிய 11 வயது சிறுவன்!!

மீட்கப்பட்ட தாய் மற்றும் அவரது குழந்தை

Sonitpur:

ஆற்றுக்குள் தவறி விழுந்த தாய் மற்றும் குழந்தையை 11 வயது சிறுவன் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் அசாமில் நடந்துள்ளது. 

அசாமின் சோனித்பூர் மாவட்டம் தன்கோனா கிராமத்தில் பாலம் ஒன்று உள்ளது. இதன் வழியே தனது 2 குழந்தைகளுடன் தாய் ஒருவர் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது நீர் வரத்து அதிகமாக இருந்ததால், 2 குழந்தை, தாய் மற்றும் உத்தம் தாதி என்ற 11 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் தவறி விழுந்தனர். 
 

3jnhj0as

அப்போது, துணிச்சலாக செயல்பட்ட சிறுவன் உத்தம் தாதி தாய் மற்றும் ஒரு குழந்தையை காப்பாற்றி கரை சேர்த்தார். சிறுவனை ஊர் மக்களும், சோனித்பூர் மாவட்ட ஆட்சியரும் பாராட்டியுள்ளனர். இருப்பினும் இன்னொரு குழந்தையை இழந்த சோகத்தில் அந்த தாய் உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லகி ஜோதி தாஸ், 'உச்சபட்ச வீரத்தை சிறுவன் உத்தம் தாதி வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அவரால் ஒரு குழந்தையை காப்பாற்ற முடியவில்லை' என்றார். 

தேசிய அளவில் வீர தீரச் செயல் புரிந்ததற்கு சிறுவன் உத்தம் தாதியின் பெயர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது. 

.