நேதாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு!

சுதந்திர போராட்ட வீரர்ரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122 வது பிறந்தநாளை தொடர்ந்து ரெட்ஃவோர்டில் அவருக்கு ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

நேதாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு!

நேதாஜியின் குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு, நேதாஜி பயன்படுத்திய தொப்பியை பரிசளித்தனர்

New Delhi:

இந்தியாவின் மறைந்த சுதந்திர போராட்ட வீரர்ரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122 வது பிறந்தநாளை தொடர்ந்து ரெட்ஃவோர்டில் அவருக்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.அருங்காட்சியகத்தை மலர்தூவி மரியாதை செய்து திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, நேதாஜி அவர்களின் குடும்பத்தினர் நேதாஜியின் தொப்பி ஓன்றை பரிசளித்தனர்.

அதைதொடர்ந்து ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி ‘நேதாஜி அவர்கள் பயன்படுத்திய தொப்பியை எனக்கு பரிசாக தந்தற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் இந்த தொப்பி தற்போது ரெட்ஃவோர்டில் உள்ள கரான்டி மந்திர்ரில் காட்சிபடுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் இளைஞர்கள் இதை பார்கும்போது அவர்களுக்கு நேதாஜியின் வாழ்கையை பார்த்து வாழ் துண்டுதலை ஏற்படுத்தும்' என கூறினார்.

அதற்கு பின்னர் யாட்-யீ-ஜாலியன் எனப்படும் ஜாலியன்வாலா பாக் படுகொலையில் இறந்தவர்களுக்கான அரூங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி பார்வைட்டார். மேலும் அவர் கூறுகையில் ‘இன்று திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் நமது வரலாற்றை இனி வரும் இளைஞர்களுக்கு ஆர்வமுடன் தெரிந்துகொள்ள உதவும்' என கூறினார்.

ரெட்ஃவோர்டில் உள்ள கரான்டி மந்திர் என்னும் இடம், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய சுதந்திர வீரர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவகம். இதில் இந்தியன் நேஷ்னல் ஆர்மியில் சுபாஷ் சந்திர போஸ் பயன்படுத்திய நாற்காலி, வாள், பதக்கங்கள், சீரூடைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஆனால் நாட்டில் இருந்த போராடும் இளைஞர்களை ஓன்றினைத்து தேசத்திற்காக போராடிய நேதாஜியை போற்றும் வகையில் நாடுமுழுவதும் விடுமுறை அளிக்காதது ஏன் என்றும் அவரை தேச தலைவராக அறிவிக்காதது ஏன் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி கேள்வி எழுப்பினார்.

அதேசமயத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என். சந்திரபாபு நாய்டு மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் நேதாஜியின் பிறந்தநாளையொட்டி அவரது வீர்ம் மற்றும் புகழை நினைவுகூர்ந்து கருத்து தெரிவித்திருந்தனர்.