This Article is From Aug 16, 2019

குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய பாஜக எம்.பியின் மகன் கைது!

பாஜக எம்.பி. ரூபா கங்குலியின் மகன் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிளப்பின் சுவரில் மோதியதை அடுத்து அவர் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக எம்.பி. ரூபா கங்குலியின் மகன் கொல்கத்தாவில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்

Kolkata:

குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக, பாஜக எம்.பியும், நடிகையுமான ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி, ரூபா கங்குலி. இவரது மகன் ஆகாஷ் முகர்ஜி, இவர் நேற்று இரவு கொல்கத்தா கோல்ஃப் கிரீன் பகுதியில் காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது, அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதிவேகமாக சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் கோல்ப் கிளப்பின் சுவற்றில் மோதியது. இந்த விபத்து குறித்து போலீசார் கூறும்போது, விபத்தில் இருந்து பலர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். வேகமாக வந்த கார் கொல்கத்தா கோல்ப் கிளப் சுவற்றில் மோதியுள்ளது. இதையடுத்து, அதிவேகமாக கார் ஒட்டியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

bopjanbk

தொடர்ந்து, அவர் போதையில் வந்தாரா என்பது பற்றி மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, ரூபா கங்குலி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, விபத்து குறித்த அறிக்கைகளுக்குப் பிறகு, சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

எனது வீட்டின் அருகே எனது மகன் விபத்தில் சிக்கியுள்ளான். இதுதொடர்பாக போலீசை அழைத்த நான், விபத்து தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தினேன். இதில் நான் எந்த அரசியலும் செய்யவில்லை. எனது மகனை அதிகம் நேசிக்கிறேன். அவனை நல்லபடியாக பார்த்தும் கொள்வேன். ஆனால், சட்டம் அதன் கடமையை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்து குறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கார் சென்றது. தொடர்ந்து அருகில் இருந்த சுவற்றில் மோதி நின்றது. இதில் ஒரு பகுதி சுவர் இடிந்து காரின் மீது விழுந்தது. இதில் காரை ஓட்டி வந்தவருக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, காரை ஓட்டி வந்த ஆகாஷ் முகோபாத்யாவை அருகில் இருந்த அவரது இல்லத்தில் இருந்து அவரது தந்தை வந்து காரின் உள்ளிருந்து மீட்டெடுத்தார என்றனர். இதையடுத்து, நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, புதிய மோட்டார் வாகன சட்டப்படி அவருக்கான தண்டனைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

.