This Article is From Jun 06, 2019

பாஜக அமைச்சரின் மகனுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

அருணாச்சல பிரதேச தொழில்துறை அமைச்சர் டும்கே தாகராவின் மகனான காஜீம் பாகாரா 2017ல் நடந்த கொலையில் தண்டிக்கப்பட்டார்.

பாஜக அமைச்சரின் மகனுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

இந்திய சட்டப்படி ஆயுள்தண்டனை என்பது 14 ஆண்டுகளாகும்.

Itanagar:

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பாஜக அமைச்சரின் மகனுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

அருணாச்சல பிரதேச தொழில்துறை அமைச்சர் டும்கே தாகராவின் மகனான காஜீம் பாகாரா 2017ல் நடந்த கொலையில் தண்டிக்கப்பட்டார்.

போலீஸ் ஆதாரங்களின் படி மார்ச் 26, 2017 அன்று மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் வெஸ்டில் கென்ஜம் காம்சி என்பவர் கொல்லப்பட்டார். ஒப்பந்தத்தில் பணம் செலுத்துவது குறித்த பிரச்னையில் இருவருக்குமிடையே நடந்த சண்டையில் கொலை நிகழ்ந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோட்டலின் வெளியே நிறுவப்பட்ட சிசிடிவி கேமராவில் கொலை நிகழ்ந்தது பதிவாகியுள்ளது.

இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 மற்றும் ஆயுதப் பிரிவு சட்டம் 27 (1) பிரிவின் கீழ் கஜூம் பாகாரா குற்றம் சாட்டப்பட்டார். 

2017 ஆம் ஆண்டு டும்கெ தாகரா சட்டமன்றத் துணைத்தலைவராக இருந்தார். 

இந்திய சட்டப்படி ஆயுள்தண்டனை என்பது 14 ஆண்டுகளாகும்.

.