This Article is From Feb 21, 2019

ஜூனியர் எஞ்ஜினியர் தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன் –இணையத்தில் பரபரப்பு

ஜூனியர் எஞ்ஜினியர் பணிக்கு 17 ஆயிரம்பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் தேர்வானவர்களில் சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

ஜூனியர் எஞ்ஜினியர் தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன் –இணையத்தில் பரபரப்பு

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக சன்னி லியோன் உள்ளார்.

New Delhi:

பீகாரில் ஜூனியர் எஞ்ஜினியர் (ஜே.இ.) பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலில் சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச படங்களில் நடத்து பெயர்பெற்ற சன்னி லியோன் பாலிவுட்டுக்கு திரும்பி அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் பீகாரில் ஜே.இ. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 214 இடங்களுக்கு 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அப்ளை செய்திருந்தனர்.

அவர்களில் கல்வித் தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் 642 பேர் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகியுள்ளனர். அந்தப் பட்டியலில் சன்னி லியோனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவருக்கு வயது 27 என்றும், 5 ஆண்டுகள் இஞ்ஜினியராக பணியாற்றிய அனுபவம் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி அடிப்படையில் 73.5 மதிப்பெண்களும், அனுபவத்தின் அடிப்படையில் 25 மதிப்பெண்களும் சன்னி லியோனுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதை யாரும் கவனிக்காமல் எப்படி பீகார் அரசின் இணைய தளத்தில் இந்த விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.

இன்னொருவரின் பெயர் BVCXZBNNB என்று பதிவிடப்பட்டுள்ளது. அவர் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த விவகாரத்தை பீகார் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

 

மேலும் படிக்க - பிரிட்டிஷ் அழகியின் கவர்ச்சியும், அல்லோல்படும் ரசிகர்களும்!!

.