This Article is From Apr 23, 2020

சிறுவர்களுடன் விளையாட முடியாததால் சோகம்; இதயங்களை வென்ற புல்டாக் புகைப்படம்!

சிறுவர்களின் கவனத்தை பெற அவன் தொடர்ந்து குறைத்துகொண்டிருந்தான், எனினும் நாங்கள் 6வது மாடியில் வசிப்பதால், அவர்களால் அதனை கேட்க முடியாது என்றார் பிக் போப்பாவின் உரிமையாளர்.

சிறுவர்களுடன் விளையாட முடியாததால் சோகம்; இதயங்களை வென்ற புல்டாக் புகைப்படம்!

பிக் போப்பா சோகமாக உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹைலைட்ஸ்

  • நெட்டிசன்களின் இதயங்களை வென்ற வைரல் புகைப்படம்
  • சோகத்தில் இருக்கும் புல்டாக்கின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரல்
  • அவன் சிறுவர்களை மிகவும் நேசிப்பவன்.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குழந்தைகள் சிலர் விளையாடுவதை பால்கனியில் இருந்த படி பார்த்தபடி, அவர்களுடன் விளையாட முடியவில்லையே என்ற சோகத்தில் இருக்கும் புல்டாக்கின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இதுதொடர்பாக அந்த புல்டாக்கின் உரிமையாளர் ரஷிதா எல்லீஸ் கூறும்போது, பிக் போப்பாவுக்கு மற்ற நாய்களையும், பெரியவர்களையும் காட்டிலும் சிறுவர்கள் என்றால் மிகவும் பிடித்தமானவர்கள். அவன் சிறுவர்களை மிகவும் நேசிப்பவன். 

எனினும், எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக பிக் போப்பா வீட்டிலையே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அவனால் தனது வளாகத்தில் உள்ள குழந்தைகளுடன் விளையாட முடியவில்லை. அவனது நண்பர்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளான். 

3 வயதேயான அந்த இங்கிலீஷ் புல்டாக்கின் புகைப்படத்தை ரஷிதா கடந்த செவ்வாயன்று தனது ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படத்தில், செல்லமாக போப் என்று அழைக்கப்படும் அந்த புல்டாக் வகையை சேர்ந்த நாய்க்குட்டி தனது தலையை தொங்கவிட்டபடி குணிந்து இருந்தது.  

மேலும், ரஷிதா புகைப்படத்துடன் போப்பா சோகமாக இருப்பதற்கான காரணம் குறித்தும் பதிவு செய்துள்ளார். அதில், பிக் போப்பா இன்று மிகவும் சோகமாக காணப்படுகிறான். குடியிருப்பில் உள்ள குழந்தைகளுடன் விளையாட முடியவில்லை என்ற தவிப்பில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவன் அந்த குழந்தைகள் விளையாடுவதை பால்கனியில் நின்றபடி பார்த்து வருகிறான் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், சிறுவர்களின் கவனத்தை பெற அவன் தொடர்ந்து குறைத்துகொண்டிருந்தான், எனினும் நாங்கள் 6வது மாடியில் வசிப்பதால், அவர்களால் அதனை கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சோகத்தில் இருக்கும் அந்த புல்டாக்கின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் ட்விட்டரில், 64,000 ரீட்விட்களையும், கிட்டத்தட்ட 6 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான கமெண்டுகளையும் அந்த புகைப்படம் பெற்றுள்ளது. அதில், பலரும் பிக் போப்பாவின் தனிமைப்படுத்தல் வருத்தத்தை புரிந்துகொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

பிக் போப்பாவின் வைரல் புகைப்படத்திற்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்,

இந்த புகைப்படம் வைரலானது தொடர்பாக பிக் போப்பாவின் உரிமையாளர் ரஷிதா கூறும்போது, நாம் நண்பர்களுடன் வெளியில் சுற்றுவது போன்ற வழக்கமாக செய்யும் செயல்களை தற்போது செய்ய முடியாது. அதனால், இந்த புகைப்படத்தை பார்க்கும் மக்களால் அதனுடன் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியும். என்று அவர் தெரிவித்துள்ளார். 

Click for more trending news


.