உலகளவில் கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- உலகளவில் கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
- இந்தியாவில் கிட்டதட்ட 200 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
- மகனுக்கு கொரோனா இருப்பதை மறைத்த ரயில்வே அதிகாரி சஸ்பெண்ட்!
Bengaluru: வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மறைத்த பெங்களூர் ரயில்வே பெண் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மன், இத்தாலி சென்று திரும்பிய தனது 25வயது மகனின் பயண விவரத்தை அந்த அதிகாரி மறைத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தென் மேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் விஜயா கூறும்போது, ரயில்வேயில் உதவி பணியாளர் அதிகாரியாக இருக்கும் அந்தப் பெண், தனது மகனைப் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில்வே காலணியின் விருந்தினர் மாளிகையில் உள்ள அறையில் தங்க வைத்துள்ளார்.
இப்படி, ரயில்வே ஓய்வறையில் தனது மகனைத் தங்கவைத்து "மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து" ஏற்படுத்தியுள்ளார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
அவர் தனது குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகத் தனது மகனை மறைத்து வைத்தார், ஆனால் அது நம் அனைவருக்கும் ஆபத்தை விளைவித்துள்ளது, "என்று அவர் கூறினார்.
தற்போது, அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மார்ச்.13ம் தேதி அன்று பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர், வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கும் படி, அறிவுறுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு, அவர் கொரோனா சோதனை செய்த போது, அவருக்குப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, பதினாறு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெங்களூரில் கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் கிட்டதட்ட 200 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.