வெளியுறவு அமைச்சரை தொடர்ந்து, இந்திய பயணத்தை ரத்து செய்தார் வங்க தேச உள்துறை அமைச்சர்!!

குடியுரிமை திருத்த மசோதா தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து திமுக டிசம்பர் 17-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சரை தொடர்ந்து, இந்திய பயணத்தை ரத்து செய்தார் வங்க தேச உள்துறை அமைச்சர்!!

அமித் ஷாவுடன் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான்.

New Delhi:

இந்திய பயணத்தை வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ரத்து செய்த சில மணி நேரங்களில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அசாதுசமான் கானும் தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளார். 

குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இதையடுத்து, மேகாலாயவுக்கு வரவிருந்த பயணத்தை வங்க தேச உள்துறை அமைச்சர் ரத்து செய்திருக்கிறார். 

நாளை மேகாலயாவுக்கு வருவதாக இருந்த அமைச்சரின் பயணம் ரத்தாகியுள்ளது. முன்னதாக வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமென் தனது பயணத்தை ரத்து செய்திருந்தார். 

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, வங்கதேச வெளியுறவு அமைச்சர் டிசம்பர் 12 முதல் 14-ம்தேதிக்குள் வருவதாக இருந்தது. இந்த பயணத்தின்போது, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டது. 

வங்கதேச வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருவதாக இருந்தால், இன்று மாலை 5.20-க்கு அவர் டெல்லி வந்திருக்க வேண்டும். அவரது பயணம் ரத்தானது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ரவீஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், 'வங்கதேச வெளியுறவு அமைச்சரின் இந்திய பயணம் ரத்தாகியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியா - வங்கதேசத்தின் உறவு வலுவாக உள்ளது. இந்த பயணம் ரத்தானதால் உறவில் பிளவு ஏதும் ஏற்படாது ' என்று தெரிவித்தார். 

பயணம் ரத்தானது குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சர் மோமென் கூறுகையில், 'அறிவாளர்களின் நினைவு தினத்தில் பங்கேற்க வேண்டியிருந்ததால் எனது இந்திய பயணததை ரத்து செய்துள்ளேன். இது டிசம்பர் 14-ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதன்பின்னர் டிசம்பர் 16-ல் வங்கதேச வெற்றி நாள் கொண்டாடப்படும். இதிலும் நான் பங்கேற்க வேண்டும். இணை அமைச்சர் ஸ்பெயினிலும், துறை செயலர் ஹேக்கிலும் உள்ளனர். கட்டாய சூழல் காரணமாக எனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளேன்' என்று விளக்கம் அளித்துள்ளார். 

More News