This Article is From May 28, 2020

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த யூனைடைட் மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் வளாகத்தில் 5 பேர் உயிரிழந்து காணப்பட்டனர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

Dhaka:

வங்கதேசம் தலைநகர் தாகாவில், உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தீயணைப்பு துறை அதிகாரி ரஹ்மான் கூறும்போது, எதனால், தீ விபத்து ஏற்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. கிட்டதட்ட ஒரு மணிநேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த யூனைடைட் மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் வளாகத்தில் 5 பேர் உயிரிழந்து காணப்பட்டனர். இதில், 45 முதல் 75 வயதுக்குட்பட்ட, ஒரு பெண் உட்பட 4 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். 

வங்கதேசத்தில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மருத்துவமனைகள் போராடி வருகின்றன. இதுவரை அங்கு 38,292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 544 பேர் உயிரிழந்துள்ளனர். 

16 கோடி பேருக்கு அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஒரு நாட்டில் குறைந்த அளவிலே சுகாதார மையங்கள் இருப்பதால், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அதனை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் சுகாதார அதிகாரிகள் உள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்ற தெற்காசிய நாட்டில் ஏற்பட்ட பெரிய தீ விபத்துக்களுக்கு லாக்ஸ் விதிமுறைகளும் மோசமான அமலாக்கங்களுமே பெரும்பாலும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டாக்காவின் 22மாடி உயரமான கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 

அதேபோல், கடந்த பிப்ரவரி மாதத்தில், டாக்காவிற்கு அருகே நூற்றாண்டுகள் பழமையான ஒரு நகரத்தில் 71 பேர் உயிரிழந்தனர். 12 பேர் வரை படுகாயமடைந்தனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.