மத்திய ஆயூஷ் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

கனரக தொழில்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துக்கான மத்திய அமைச்சரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய ஆயூஷ் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஸ்ரீபாத் நாயக் ஆயுஷ் அமைச்சகத்தின் அமைச்சராக உள்ளார்

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தற்போது ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இந்த செய்தியை டிவிட்டர் வாயிலாக பகிர்ந்துகொண்ட அவர், தனக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றும், ஆனால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது அவர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது மத்திய அமைச்சராக ஸ்ரீபாத் நாயக் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக  கடந்த வாரம் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். தற்போது மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.

கனரக தொழில்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துக்கான மத்திய அமைச்சரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 60,000 க்கும் அதிகமானோர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 46,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.