This Article is From Jul 23, 2020

அயோத்தி ராமர் கோயிலின் உயரத்தை திட்டமிட்டதை விட 20 அடி அதிகரிக்க முடிவு!

Ram Temple: இதனிடையே, வரும் ஆக.5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற விஜபிக்களும் கலந்து கொள்கின்றனர். 

அயோத்தி ராமர் கோயிலின் உயரத்தை திட்டமிட்டதை விட 20 அடி அதிகரிக்க முடிவு!

Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயிலின் உயரத்தை திட்டமிட்டதை விட 20 அடி அதிகரிக்க முடிவு!

ஹைலைட்ஸ்

  • ராமர் கோயிலின் உயரத்தை திட்டமிட்டதை விட 20 அடி அதிகரிக்க முடிவு!
  • ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
  • கடந்த 1988ல் இந்த கோவிலின் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது.
Ayodhya:

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் உயரத்தை திட்டமிட்டதை விட 20 அடி அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கோவிலின் வடிவமைப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, வரும் ஆக.5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற விஜபிக்களும் கலந்து கொள்கின்றனர். 

இதுதொடர்பாக அயோத்தி ராமர் கோவிலின் முதன்மை வடிவமைப்பாளரான சோம்புராவின் மகனான, நிகில் சோம்புரா ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், கடந்த 1988ல் இந்த கோவிலின் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது. இது தயாரிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 

தற்போது மக்களும் கோவிலுக்கு வருவதில் மிகுந்த ஆவர்வத்துடன் உள்ளனர். எனவே அதன் உயரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நினைத்தோம். இந்த திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி, கோயிலின் உயரம் 141 அடியிலிருந்து, 161 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த புதிய வடிவமைப்புடன் கூடுதலாக இரண்டு மண்டபங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய வடிவமைப்பின் அடிப்படையில் செதுக்கப்பட்ட அனைத்து தூண்களும், கற்களும் தற்போது பயன்படுத்தப்படும். புதிதாக இந்த இரண்டு ''மண்டபங்கள்'' மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன, "என்று அவர் கூறினார்.

இந்த கோவிலின் கட்டுமான பணிகளுக்கு 3.5 வருடங்கள் ஆகும் என தெரிகிறது. . 

தொடர்ந்து நிகில் சோம்புரா கூறும்போது, பிரதமர் மோடி தலைமையில் பூமி பூஜைகள் தொடங்கிவிட்டதென்றால், கட்டுமான பணிகள் தொடங்கிவிடும். எல்&டி நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், இயந்திரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களுடன், கட்டுமான இடத்திற்கு வருகை தந்துள்ளனர். பணிகள் தொடங்கியதில் இருந்து 3 முதல் 3.5 வருடம் வரை அதனை முடிப்பதற்கு காலம் எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்த பூமி பூஜை நடைபெறுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக வேத சடங்குகள் நடைபெறும். அதன் பின்னர், 40 கிலோ எடையிலான வெள்ளி செங்கல் கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். 

இதற்கான சடங்குகள் ஆக.3ம் தேதி தொடங்கும் என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

.