This Article is From Oct 15, 2019

Ayodhya Case : இறுதிக்கட்டத்தை எட்டிய வழக்கு; பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு

Section 144 imposed: இதன்படி அயோத்தியில் அனுமதியின்றி ஆள் இல்லா குட்டி விமானங்கள் பறக்கவிடுவது, படகுகளில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவது தடை விதிக்கப்பட்டுள்ளது

Section 144 in Ayodhya: பாதுகாப்பை கருத்தில் கொண்டு 144 தடையுத்தரவு கொண்டுவரப்பட்டது

New Delhi:

சர்ச்சைக்குரிய வழக்கான அயோத்தி பாபர் மசூதி -ராம ஜென்ம பூமி நிலம் தொடர்பான வழக்கு  இறுதிக்கட்ட வாதத்தை எட்டியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் டிசம்பர் 10 வரை அயோத்தி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை அயோத்தி மாவட்ட நிர்வாகம் நேற்று நள்ளிரவு அறிவித்தது. 

தசரா விடுமுறைக்குப் பின் மீண்டும் உச்ச நீதிமன்றம் பணிகளை தொடங்கியுள்ளது. அயோத்தி வழக்கின் 38வது நாளாக உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை தொடர்கிறது. 

அயோத்தி மற்றும் இங்கு வருபவர்களின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு 144 தடையுத்தரவு கொண்டுவரப்பட்டதாக அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் அனுஜ் குமார் ஷா தெரிவித்தார். இதன்படி அயோத்தியில் அனுமதியின்றி ஆள் இல்லா குட்டி விமானங்கள் பறக்கவிடுவது, படகுகளில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவது தடை விதிக்கப்பட்டுள்ளது

விஷ்வ ஹிந்து பரிஷித் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “ஒட்டு மொத்த அயோத்தி தீபாவளி அன்று ஜொலிக்கும் போது ராமர் பிறந்த இடம் மட்டும் இருளடைந்து இருக்க வேண்டுமா…? ராமர் பிறந்த இடத்தில் விளக்கேற்ற அனுமதி கேட்போம்” என்று தெரிவித்துள்ளனர். 

இந்துக்கள் விளக்கு ஏற்ற அனுமதி கேட்டால் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி கேட்பார்கள். 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கி நீதிபதி அமர்வு இந்த வழக்கை அன்றாடம் விசாரித்து வருகிறது. ஹிந்து மற்றும் முஸ்லீம் தலைவர்களுக்கிடையே சமாதான பேச்சுவார்த்தைகள் யாவும் தோல்வி அடைந்தன. இந்த மாத தொடக்கத்தில் தலைமை நீதிபதி அக்டோபர் 17க்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

2.77 ஏக்கர் கொண்ட இந்த அயோத்தியின் சர்ச்சைக்குறிய நிலம் சுண்ணி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹரா மற்றும் ராம் லீலா ஆகிய மூன்று குழுக்கள் தங்களுக்கு சொந்தமானவை என்று கேட்டு வருகின்றனர். மூவருக்கும் சமமாக பிரிக்கப்படலாம. 

.