“2002-ம் ஆண்டிலேயே மோடியை வெளியேற்ற நினைத்தார் வாஜ்பாய்!”- யஷ்வந்த் சின்கா பகீர் தகவல்

"எனக்கு கிடைத்த தகவல்கள்படி, அத்வானிஜி தான், மோடி அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு எதிராக குரல் கொடுத்தார்"

 Share
EMAIL
PRINT
COMMENTS
“2002-ம் ஆண்டிலேயே மோடியை வெளியேற்ற நினைத்தார் வாஜ்பாய்!”- யஷ்வந்த் சின்கா பகீர் தகவல்

"பாகிஸ்தானுடன் நமது நாட்டை மோடி ஒப்பிட்டு வருகிறார். பாகிஸ்தான் நமக்கு ஒப்பான ஒரு நாடா"


Bhopal: 

முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்கா, “2002 ஆம் ஆண்டே நரேந்திர மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப் பார்த்தார் அப்போதைய பிரதமர் வாஜ்பாய். அத்வானியின் நெருக்கல்தனாலேயே, மோடியின் பதவி தப்பித்தது” என்று பகீர் கிளப்பும் தகவலை தெரிவித்துள்ளார். 

அவர் போபாலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி குறித்தும் பாஜக தலைமையிலான மத்திய அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். “குஜராத்தில் நடந்த மதக் கலவரங்களை அடுத்து, அடல் பிகாரி வாஜ்பாய், மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பதவி விலக்க வேண்டும் என்பதில் ஸ்திரமாக இருந்தார். மோடி பதவி விலகினால், குஜராத் அரசும் கலைக்கப்பட வேண்டும் என்றும் அவர் நினைத்தார். 

அப்போது கட்சிக்குள் ஒரு சந்திப்பு நடந்தது. எனக்கு கிடைத்த தகவல்கள்படி, அத்வானிஜி தான், மோடி அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு எதிராக குரல் கொடுத்தார். அவர் அட்லிஜியிடம், மோடி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டால் தானும் பதவி விலகிவிடுவேன் என்று கூறினார். இதன் காரணமாகவே மோடிஜி தொடர்ந்து ஆட்சி நடத்த முடிந்தது” என்று தெரிவித்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தவர் சின்கா.

பிரதமர் மோடி, “ஐஎன்எஸ் விராட் போர் கப்பலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, குடும்ப சுற்றுலாவுக்காக பயன்படுத்தினார்” என்று கூறிய கருத்துக்கு சின்கா பதிலளிக்கும்போது, “இது குறித்து கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் விளக்கம் அளித்துவிட்டனர். எனவே நாம் பேச தேவையில்லை. ஒரு நாட்டின் பிரதமராக இருந்துகொண்டு இப்படி பொய் பேசியிருக்கக் கூடாது. அது அவர் வகிக்கும் பதவியின் மாண்புக்கு அழகல்ல. 

மேலும், பாகிஸ்தான் குறித்து இந்த தேர்தலின் போது அதிக சர்ச்சை கிளப்புவதும் அது குறித்தே பேசப்படுவதும் துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தானுடன் நமது நாட்டை மோடி ஒப்பிட்டு வருகிறார். பாகிஸ்தான் நமக்கு ஒப்பான ஒரு நாடா. சீனா குறித்தும், சீனாவுடன் நம் நிலை குறித்தும் ஒரு பேச்சும் இல்லை. இந்த தேர்தல் என்பது நம் நாட்டின் கடந்த காலத்தை மையப்படுத்தி இருக்கவில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசு எப்படி ஆட்சி புரிந்தது என்பதை வைத்துதான் இந்த தேர்தல் இருக்கிறது” என்றார் முடிவாக. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................