முசாபர்பூருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஷர்ஷ் வர்தன் மருத்துவமனைக்கு பார்வையிட வந்திருந்தபோது அவரின் கண் முன்னே ஒரு குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. பீகாரில் மூளை அலற்சி காரணமாக 82 குழந்தைகள் இறந்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அமைச்சர் பார்வையிட வந்தபோது 5 வயது குழந்தை ஒன்று இறந்துள்ளது. குழந்தையின் தாய் பத்திரிகையாளர் முன்பு அழுதுள்ளார்.
வழக்கத்தை விட இந்த ஆண்டு மூளைக்காய்ச்சலினால் குழந்தைகளின் இறப்பு அதிகமாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின் பலி ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரியில் 62 குழந்தைகளும் தனியார் மருத்துவமனையில் 11 குழந்தைகளும் இறந்துள்ளனர். சனிக்கிழமை 61 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் சிகிச்சையில் உள்ளனர். முதலமைச்சர் நிதிஷ் குமார் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.