முதலமைச்சருக்கு எதிராக பதிவிட்ட பாஜக ஐடி செல் உறுப்பினர் கைது

அண்மையில் சமூக வலை தளத்தில் முஸ்லீம் குடியேறிகளிடமிருந்து பழங்குடியின அசாமிகளை அரசு காப்பாற்றத் தவறி விட்டதாக முதலமைச்சரை விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநில மொரிகன் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி செல் உறுப்பினர் கைது செய்துள்ளதை காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது

Guwahati, Assam:

அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனுவால் மீது அவதூறு பரப்பிய காரணத்துக்காக பாஜகவின் சமூக ஊடக முழுநேர பணியாளர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் தனியார் பள்ளிகளை கையாளுவது குறித்து விமர்சனம் செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை போட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேபோன்ற குற்றச்சாட்டுகளில் கேள்விகேட்ட மூவரை கைது செய்துள்ளது காவல்துறை. அசாம் மாநில மொரிகன் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி செல் உறுப்பினர் கைது செய்துள்ளதை காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.

நேற்று இரவு ராஜூ மஹந்தா நிது போராவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் ஒன்று பதிவு செய்யப்பட்டது அதன்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரில் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஸ்வப்னனில் டெக்கா கூறினார். நிது போரா அசாம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் கூறி பதிவிட்டுள்ளார்.

ஐ.எஸ்.என்.எஸ் செய்தி அறிக்கையின் படி மற்றொரு பாஜக ஐடி செல் உறுப்பினரான ஹெமந்தா பருவாவின் வீடு சோதனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அண்மையில் சமூக வலை தளத்தில் முஸ்லீம் குடியேறிகளிடமிருந்து பழங்குடியின அசாமிகளை அரசு காப்பாற்றத் தவறி விட்டதாக முதலமைச்சரை விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  பாஜகவினர் கருந்து சுதந்திரத்துக்கான உரிமை உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

Listen to the latest songs, only on JioSaavn.com