முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து: அசாம், திரிபுராவில் பாஜக ஆதரவாளர்கள் கைது!

முதல்வர் சார்பானந்தா குறித்து சமூகவலைதளங்களில் வகுப்புவாத கருத்துகளை பதிவு செய்த அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களை சேர்ந்த பாஜக ஆதரவாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து: அசாம், திரிபுராவில் பாஜக ஆதரவாளர்கள் கைது!

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிதி போரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Guwahati, Assam:

அசாம் மாநில முதல்வர் சார்பானந்தா குறித்து சமூகவலைதளங்களில் வகுப்புவாத கருத்து வெளியிட்டதாக அசாம் மாநில பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல், திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் தேவ் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக பத்திரிகையாளர்கள் உட்பட, 5 பேர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாஜக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூகவலைதளங்களில் வகுப்புவாத கருத்துகளை வெளியிட்டதாக, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த, நீது போரா என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணைக்கு மேலும் 3 பேர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் வெளியிட்டுள்ள செய்தியில், மற்றொரு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர் வீட்டிலும் போலீசார் சோதனை செய்துள்ளனர். திரிபுராவில், பாஜக ஆதரவாளரான அனுபாம் பால் என்பவர் அவதூறு தகவலை வெளியிட்டதை தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை தொடர்ந்துள்ளது.

டெல்லியில் நேற்று அனுபாம் பால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மானநஷ்ட வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பிப்லாப் குமார் மற்றும் அவரது மனைவி கூறும்போது, இவை அனைத்தும் பாஜக அரசை கொண்டுவருவதற்கான செயலாக திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

More News