This Article is From Oct 04, 2018

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 குறைகிறது

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியில் ரூ. 2.50-யை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் விலைக்குறைப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 குறைகிறது

பெட்ரோல், டீசல் விலை மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அருண் ஜெட்லி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருந்தது. இதனால் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் மட்டும் அல்லாமல், போக்குவரத்திற்கு அதிக செலவு ஏற்பட்டதால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 


இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50-யை குறைத்து அறிவிப்பை வெளியிட்டார். இதில் ரூ. 1.50 வரியில் குறைக்கப்படும். மீதம் உள்ள ஒரு ரூபாய் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு வசூலிக்கும். 


அரசின் இந்த அறிவிப்பால் நாட்டு மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.