This Article is From Aug 05, 2019

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: சட்டப்பிரிவு 370 கூறுவது என்ன?

ஜம்மு-காஷ்மீர் "மறுசீரமைக்கப்படும்" என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மூன்றும் தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: சட்டப்பிரிவு 370 கூறுவது என்ன?

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என அறிவிப்பு

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தனது அமைச்சரவையுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் "மறுசீரமைக்கப்படும்" என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ஏற்கனவே மாநிலம் ஜம்மு, காஷ்மீர், லடாக் என மூன்றாக பிரிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. 

சட்டப்பிரிவு 370 என்பது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கும் 'தற்காலிக ஏற்பாடு' ஆகும். இந்த சட்டம் மாநிலத்தில் தனது சொந்த அரசியலமைப்பை உருவாக்க அனுமதிக்கிறது. மேலும், மாநிலத்தின் மீது நாடாளுமன்றத்தின் சட்டமன்ற அதிகாரங்களுக்குள் உட்படமல் இது கட்டுப்படுத்துகிறது.

இதனால், பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், நிதி மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்டவை தவிர்த்து மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மாநில அரசின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும். மேலும், சட்டப்பிரிவு 370-ன் கீழ் நாடாளுமன்றத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது. 

இதன்மூலம் ஜம்மு- காஷ்மீரில் குடியுரிமை பெற்றவர்கள் மற்ற இந்தியர்களுடன் ஒப்பிடுகையில், குடியுரிமை, சொத்துரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவற்றில் தனித்தனி சட்டங்களின் கீழ் வாழ்கின்றனர்.

ஒரே நேரத்தில் பல்வேறு பட்டியலில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டால், "மாநில அரசாங்கத்தின் ஒப்புதல்" போன்ற அதிகாரங்களை பெற வேண்டும் என்று அது கோருகிறது. 

சட்டப்பிரிவு 370ன் கீழ் போர், எல்லை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காலங்களிலே அவசரநிலையை அறிவிக்க முடியும். இதுவும் மாநில அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் செய்யபடாவிட்டால் இடையூறாக கருதப்படும். 

.