கேரளாவில் மீண்டும் ஒரு பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டு..!

கேரளாவில் மீண்டும் ஒரு பாதிரியார் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது

கேரளாவில் மீண்டும் ஒரு பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டு..!
Thiruvananthapuram:

கேரளாவில் மீண்டும் ஒரு பாதிரியார் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும் 12 பாதிரியர்கள் கேரளாவில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 

ஆர்தடாக்ஸ் சர்சசின் பாதிரியார் பினு ஜார்ஜ், 30 வயதுப் பெண் ஒருவருக்கு 2014 ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அதேபோல மலங்காராவில் இருக்கும் ஆர்த்தடாக்ஸ் சிரியன் சர்ச்சின 5 பாதிரியார்கள் தனக்கு 20 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக 34 வயதுப் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து 4 பாதிரியார்கள் மீது போலீஸ் பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. 

இது குறித்து புகார் கொடுத்த பெண்ணின் கணவர், ‘என் மனைவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு, மிரட்டல்கள் மற்றும் பிளாக்மெயில் நடந்து வந்துள்ளது. இந்த விஷயம் குறித்து எனக்கு பிப்ரவரி மாதம் தான் தெரிய வந்தது. இதையடுத்து, நான் பாதிரியர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்க முனைந்தேன். ஆனால், அப்படி செய்யக் கூடாது என்று வெளயிலிருந்து அதிக அழுத்தம் தரப்பட்டது. எனக்கு புகார் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறியுள்ளார். 

Newsbeep

ஆனால் இந்த விஷயம் குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சிரியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் கூறுகிறது. ‘எங்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக புகார் வந்தவுடன், ஒரு விசாரணை கமிட்டியை ஒருங்கிணைத்து விசாரணை நடத்த ஆரம்பித்தோம். குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் பணியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் இந்த விஷயம் குறித்து வழக்குப் பதிவு செய்யும் போது எங்கள் விசாரணையின் முடிவுக்கே வந்துவிட்டோம்’ என்று கூறியுள்ளது சர்ச் அமைப்பு. 

கடந்த சில மாதங்களில் இதைப் போன்ற பல சம்பவங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.