This Article is From Oct 18, 2018

4 வயது பேத்தியை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்ற பாட்டி!

பிடிவாதம் மற்றும் அடம்பிடிக்கும் குணம் காரணமாக சிறுமியின் மீது எரிச்சலடைந்த பாட்டி சிறுமியை கொன்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்

4 வயது பேத்தியை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்ற பாட்டி!

சிறுமியின் பாட்டி நேற்று தண்ணீர் தொட்டிக்குள் சிறுமியை மூழ்கடித்துள்ளார்.

Jaipur:

ராஜஸ்தான் ஹனுமன்கார் பகுதியை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது 4 வயது பேத்தியின் பிடிவாதம் மற்றும் அடம்பிடிக்கும் குணம் காரணமாக சிறுமியின் மீது எரிச்சலடைந்து கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் பாட்டி நேற்று தண்ணீர் தொட்டிக்குள் சிறுமியை மூழ்கடித்துள்ளார் என போலீஸ் அதிகாரி விஷ்னு தத் விஷ்னோய் கூறினார்.

இந்த கொலை சம்பவம் ஆரம்பத்தில் விபத்து போல் தெரிந்தது, எனினும் போலீஸ் விசாரணக்கு பின்னர் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன என்றார்.

பாட்டியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் உடற்கூறாய்வு முடிவுக்கு பின்னர் பாட்டி கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

.