This Article is From Jun 24, 2020

ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ கடந்தது!

Coronavirus Andhra Pradesh: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ கடக்க 3 மாதங்கள் ஆன நிலையில், அடுத்த 5,000 எண்ணிக்கையை 15 நாட்களில் எட்டியுள்ளது.

ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ கடந்தது!

ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ கடந்தது!

ஹைலைட்ஸ்

  • ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ கடந்தது!
  • கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 497 பேருக்கு வைரஸ் பாதிப்பு
  • மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 10,331ஆக பதிவு
Amaravati:

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 497 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 10,000ஐ கடந்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ கடக்க 3 மாதங்கள் ஆன நிலையில், அடுத்த 5,000 எண்ணிக்கையை 15 நாட்களில் எட்டியுள்ளது.

இதேபோல், இன்று ஏற்பட்ட 10 உயிரிழப்புகளை சேர்த்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 129ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்திய செய்திகள் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 497 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 10,331ஆக பதிவாகியுள்ளது. இதில், மருத்துவமனைகளில் இருந்து இன்று மட்டும் 146 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கர்னூலில் நான்கு கொரோனா உயிரிழப்புகள், கிருஷ்ணாவில் மூன்று, குண்டூரில் இரண்டு மற்றும் ஸ்ரீகாகுளத்தில் ஒன்று என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

அனந்தபுராமு மாவட்டத்தில் அதிகபட்சம் 90 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,028 ஆக உள்ளது. கர்னூல் (1,483) மற்றும் கிருஷ்ணா (1,132) மாவட்டத்தை தொடர்ந்து, 3வது அதிக பாதிப்பு கொண்டுள்ள மாவட்டவமாக அனந்தபுராமு உள்ளதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது. 

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 8,306 பேர் உள்ளூர்வாசிகள் ஆவார்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 1,660 பேர் ஆவார்கள், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் 365 பேர் ஆவார்கள். 

மொத்தம் 4,779 நோயாளிகள் தொற்றுநோய் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதை தொடர்ந்து மாநிலத்தில் இப்போது 5,423 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.