This Article is From Nov 16, 2019

'ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைக்கோ' - சந்திரபாபு நாயுடு மகனின் பேச்சால் சர்ச்சை!!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நடவடிக்கையால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருப்பதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளருமான நர லோகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

'ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைக்கோ' - சந்திரபாபு நாயுடு மகனின் பேச்சால் சர்ச்சை!!

தெலுங்கு தேச பொதுச்செயலாளர் நரலோகேஷ்.

Nellore (Andhra Pradesh):

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைக்கோ என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளருமான நரலோகேஷ் பேசியிருப்பது சர்ச்சையை எற்படுத்தி வருகிறது. 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நரலோகேஷ் பேசியதாவது-

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.  ராஜசேகர ரெட்டி ஒரு பிரிவினைவாதி. அவரது மகன் ஜெகன் மோகனோ ஒரு சைக்கோ. 

ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் 241 விவசாயிகள், 43 கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 5 மாதங்களில் 690 தெலுங்குதேச கட்சியின் தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஜெகன் மோகன் ஆட்சியால் பாதிக்கப்பட்டதாக கூறி, தற்கொலைக்கு முயன்றவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நரலோகேஷ் ஆறுதல் தெரிவித்தார். 

.