This Article is From Jul 11, 2019

'நிற்காமல் நீ ஓடு கோல்டு தேடி வரும்' - டூட்டி சந்துக்கு ஆனந்த் மஹிந்திரா ட்விட்

இத்தாலியில் 30வது கோடைகால பல்கலைகழக போட்டிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் டூட்டி சந்த்.

'நிற்காமல் நீ ஓடு கோல்டு தேடி வரும்' - டூட்டி சந்துக்கு ஆனந்த் மஹிந்திரா ட்விட்

100 மீட்டர் தேசிய சாதனையும் டூட்டி சந்த் உடையது தான்

ஒரு பக்கம் இந்தியா அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தோல்வி கண்டு வெளியேறினாலும் மறுமுனையில் இந்தியாவின் தடகள வீராங்கனையான டூட்டி சந்த் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா. மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான இவர், டூட்டி சந்தை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

இத்தாலியில் 30வது கோடைகால பல்கலைகழக போட்டிகள் (Summer University Games) நடைபெற்று வருகிறது. இதில் தான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் டூட்டி சந்த்.

‘ஓடி கொண்டே இருங்கள். எப்போதும் போல் பயமின்றி ஓடுங்கள்' என ட்விட் செய்திருந்தார் ஆனந்த் மஹிந்திரா.

வெற்றிக்கு பின்பு ‘என்னை கீழே தள்ளினால் மீண்டும் எழுவேன்' என ட்விட் செய்துள்ளார்  சந்த். கடந்த மே மாதம் தான் ஓர் பாலின உறவில் இருப்பதாக தெரிவித்தார் சந்த். இதற்காக கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார் டூட்டி சந்த்.

100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தேசிய சாதனையான 11.32 விநாடிகளை தன் வசம் வைத்துள்ள டுட்டி சந்த், இந்த போட்டியில் 100 மீட்டரை 11.24 விநாடியில் கடந்து தங்கம் வென்றார்.

Click for more trending news


.