This Article is From Nov 21, 2018

அமெரிக்க சுற்றுலா பயணி அந்தமான் தீவில் கொலை… திடுக்கிடும் பின்னணி!

அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது சுற்றுலா பயணி, அந்தமான் தீவில் கொலை செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்க சுற்றுலா பயணி அந்தமான் தீவில் கொலை… திடுக்கிடும் பின்னணி!

ஜானின் உடலைத் தேடுவதற்காக அந்தமான் அரசு நிர்வாகம் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. 

Port Blair/New Delhi:

அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது சுற்றுலா பயணி, அந்தமான் தீவில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை அங்கு பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தவர்கள் கொலை செய்திருப்பதாக தீவில் இருக்கும் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

அந்தமானின், சென்டினல் தீவுப் பகுதியில் ‘சென்டினல் பழங்குடியின மக்கள்' வசித்து வருகின்றனர். அத்தீவுக்கு 7 மீனவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவை அழைத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து போலீஸுக்கு தெரிய வந்ததை அடுத்து, 7 மீனவர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது. 

2011 ஆம் ஆண்டு, சென்டினல் இன மக்களின் மக்கள் தொகை 40 என்று தெரியவந்தது. உலகின் மற்ற இடங்களுடனும் நபர்களுடனும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

காவல் துறையிடம் மீனவர்கள், ‘சென்டினல் தீவில், ஜான் தரையிறங்கியவுடன், அங்கிருந்த பழங்குடியினத்தவர்கள், அவரை வில் மற்றும் அம்பு கொண்டு தாக்கினர். அதன் பிறகு அவரை நாங்கள் பார்க்கவில்லை' என்று வாக்குமூலம் கொடுத்துள்ளது. 

ஜானின் உடலைத் தேடுவதற்காக அந்தமான் அரசு நிர்வாகம் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. 
 

.