This Article is From Oct 22, 2018

அமிர்தசரஸ் ரயில் விபத்து ஜாலியன் வாலாபாக்கை நினைவூட்டுகிறது : சிவசேனா

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின்போது நடந்த ரயில் விபத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர்

அமிர்தசரஸ் ரயில் விபத்து ஜாலியன் வாலாபாக்கை நினைவூட்டுகிறது  : சிவசேனா

விபத்துக்கு பாஜக அரசே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Mumbai:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின்போது ரயில் ஒன்று பொதுமக்கள் மீது ஏறிச் சென்றது. இந்த கோர சம்பவத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் சாம்னா நாளிதழில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது-

அமிர்தசரஸில் நடந்த சம்பவம் நமக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்துகிறது. அந்த படுகொலை நடந்தது ஆங்கிலேயர் ஆட்சியில். ஆனால் சுதந்திர இந்தியாவில் அமிர்தசரஸ் துயர சம்பவம் நடந்திருக்கிறது.

நாம் சுதந்திரம் அடைந்துநீண்ட காலம் ஆகியும் மக்களின் விதி மாறவில்லை; மிகுந்த துயரத்திற்கு மத்தியில் மக்களின் உயிர் போகிறது. ரயில் விபத்துகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மற்றொருவர் வந்து அந்த பதவியில் அமர்வார்.

முன்பு சுரேஷ்பிரபு ரயில்வே அமைச்சராக இருந்த இடத்தில் இப்போது பியூஷ் கோயல் இருக்கிறார். ரயில்வேக்கு தனி பட்ஜெட் போடப்பட்டது. அந்த பட்ஜெட்டை மோடி அரசு நீக்கி விட்டது.

இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் கடந்த 1919 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த கூட்டத்தின்போது ஆங்கிலேய வீரர்கள் இந்தியர்களை சுட்டுத் தள்ளினர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

.