This Article is From Mar 17, 2020

கொரோனா பீதி: மகாராஷ்டிராவில் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு அடையாள முத்திரை!

எந்தவொரு நபரும் கட்டாய தனிமைப்படுத்தலைத் தவிர்க்க முயன்றாலோ, அல்லது 'வீட்டுத் தனிமைப்படுத்தலை' தொடராமல் இருந்தாலோ, தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பீதி: மகாராஷ்டிராவில் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு அடையாள முத்திரை!

Coronavirus: நடைபெற இருந்த அனைத்து உள்ளாட்சி மற்றும் குடிமைத் தேர்தல்களும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • Left hand of those under home quarantine to be stamped
  • Decision taken at a meeting chaired by Chief Minister Uddhav Thackeray
  • Maharashtra has reported maximum coronavirus cases in India
Mumbai:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் (39) பேர் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களை அடையாளம் காணும் வகையில் அவர்கள் முத்திரையிடப்படுவார்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களை அடையாளம் காணும் வகையில் அவர்களின் இடது கையில் முத்திரையிட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். 

எந்தவொரு நபரும் கட்டாய தனிமைப்படுத்தலைத் தவிர்க்க முயன்றாலோ, அல்லது 'வீட்டுத் தனிமைப்படுத்தலை' தொடராமல் இருந்தாலோ, தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மேலும், அத்தகைய நபர்களை வலுக்கட்டாயமாக அரசு தனிமைப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 'முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 39 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அது மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இதில், கொரோனா பாதிப்பு அறிகுறிகள் உள்ள கிட்டத்தட்ட 7 பேர் சிகிச்சையிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனை மற்றும் விமான நிலையங்களில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களின் இடது கைகளில் முத்திரையிட மும்பை மாநகராட்சி ஆணையர் பிரவீன் பர்தேஷி உத்தரவிட்டுள்ளார். இந்த முத்திரையானது, 14 நாட்களுக்கு அழியாததாகும். 

கொரோனாவால் யாரேனும் பாதிக்கப்பட்டால், அது குற்றமல்ல. அவர்களுக்குத் தொடர்ந்து, பாதுகாப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள், நாடுகளிலிருந்து வரும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் மக்களை அடையாளம் காணும் வகையில் அவர்களின் இடது கைகளில் அரசின் முத்திரை குத்தப்படும்.

இந்த முத்திரையானது, தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் கையில் வைக்கப் பயன்படுத்தப்படும் மை ஆகும். இது அறிகுறி உள்ளவர்களின் இடது கைகளில் வைக்கப்படும். அவர்கள் கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தனிமைப்படுத்தலைத் தவிர்த்து, பொது இடங்களுக்கு வரும் பட்சத்தில், இந்த முத்திரை அவர்களை அடையாளம் காண மற்ற மக்களுக்கு உதவியாக இருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

.