முதலை வாயில் சிக்கிய தர்பூசணி என்ன ஆச்சு பாருங்க!

மிகப்பெரிய அமெரிக்க முதலை, அதற்கு பாம்பர் என பெயரிடப்பட்டுள்ளது.

முதலை வாயில் சிக்கிய தர்பூசணி என்ன ஆச்சு பாருங்க!

முதலை ஒன்று முழு தர்பூசணி பழத்தை ஒரே கடியில் கடித்து சிதற வைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

முதலை ஒன்று முழு தர்பூசணி பழத்தை ஒரே கடியில் கடித்து சிதற வைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை கடந்த வியாழக்கிழமை பேஸ்புக்கில் புளோரிடாவின் செயின்ட் அகஸ்டின் அலிகேட்டர் பண்ணை விலங்கியல் பூங்கா பகிர்ந்துள்ளது. இது அவர்களின் மிகப்பெரிய அமெரிக்க முதலை, அதற்கு பாம்பர் என பெயரிடப்பட்டுள்ளது. பெரிய பழத்தை சிறு வேலையுடன் முடித்தது அந்த முதலை.

ஸ்லோ மோஷன் வீடியோ ஒன்றில், ஒருவர் தர்பூசணி பழத்தை முதலையின் திறந்த வாயில் வீசுகிறார். அதன்பின், அந்த முதலை வாயை மூடி, அந்த தர்பூசணி பழத்தை துண்டுகளாக உடைத்து, அதை அழித்து விட்டது. பின்னர் அந்த முதலை தண்ணீருக்குள் சென்றது. இந்த வீடியோ பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

"மற்ற விலங்குகளை விடவும், முதலைகளுக்கு பலம் அதிகம், 13.5 இல் எங்கள் மிகப்பெரிய அமெரிக்க அலிகேட்டர் பாம்பர் க்ரோக் வாரத்தில் காண்பிக்கப்படுகிறது," செயின்ட் அகஸ்டின் அலிகேட்டர் வீடியோவை பகிர்ந்து பதிவிட்டார். இந்த வீடியோவை கீழே பாருங்கள்:

இந்த வீடியோ பகிரப்பட்ட பிறகு, 19000 நபர்கள் இந்த வீடியோவை பார்த்ததுடன், பல கமெண்டுகள் செய்துள்ளனர்.

Newsbeep

"அந்த முதலை 'என்ன இது" நான் ஒன்றும் வெஜிடேரியன் கிடையாது!'" என்று அந்த முதலை நினைக்கும் என்று பதிவிட்டிருந்தார். "பாம்பர் சிரிக்கிறது!அவனுக்கு தர்பூசணி பிடித்திருக்கிறது!" என்று இன்னொருவர் பதிவிட்டார்.

கருத்துகள் பகுதியைப் பயன்படுத்தி வீடியோவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Click for more trending news