This Article is From Aug 24, 2020

முடிந்தால் பந்தை எடுத்துட்டு போ பார்க்கலாம்.. மனிதர்களுக்கு சவால் விடும் முதலை: வைரல் வீடியோ!

கோல்ப் பந்தை அழகாகக் கவ்வி, வாயில் வைத்தப்படி போட்டோ எடுப்பதற்குப் போஸ் கொடுக்கிறது.

முடிந்தால் பந்தை எடுத்துட்டு போ பார்க்கலாம்.. மனிதர்களுக்கு சவால் விடும் முதலை: வைரல் வீடியோ!

முடிந்தால் வந்து பந்தை எடு பார்ப்போம் என சவால் விடும் முதலை

அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாணத்தில் முதலைகள் பொதுவாகக் காணப்படும். மற்ற இடங்களை விட இங்கு அதிகளவில் முதலைகள் உள்ளன. ஏரி, குளம், வனப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதலைகள் சர்வசாதாரணமாக உலாவும். 

இந்த நிலையில், ஒரு முதலை கோல்ப் பந்தை வாயில் கவ்வி போஸ் கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.  அங்குள்ள பேட்டர்சன் என்ற பகுதியில் சிலர் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 

அப்போது அங்கு ஒரு முதலை வந்துள்ளது. இதனைக் கண்டும் காணாமல் அங்கிருந்தவர்கள் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் முதலையின் அருகில் சென்று கோல்ப் பந்து விழுந்தது. 

கோல்ப் பந்தைப் பார்த்த முதலை, அதை அப்படியே லாவகமாக வாயில் கவ்வி வைத்திருந்தது. பின்னர், வாயின் கீழ் பகுதியில் வைத்துக் கொண்டு, வாயைப் பிளந்தவாறு காட்சியளித்தது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுக்க, அதைப் பார்த்ததும் முதலை போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டது.

கோல்ப் பந்து இங்கு தான் இருக்கு, முடிந்தால் வந்து எடுத்துட்டு போ என்ற சவால் விடும் வகையில் முதலை வாயை திறந்து கூரான பற்களைக் காண்பிடித்தது. 

இந்த வீடியோ டுவிட்டரில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. நூற்றுக்கணக்கானோர் கருத்துகளிட்டு வருகின்றனர். 

Click for more trending news


.