This Article is From Jan 17, 2019

சென்னையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40% காற்று மாசு குறைந்தது!

சென்னையில் போகிப்பண்டிகையின் போது இந்தாண்டு காற்று மாசுபாடு கடந்தாண்டை விட 40% குறைந்துள்ளது

சென்னையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40% காற்று மாசு குறைந்தது!

சென்னையில் போகி பண்டிகையின் போது இந்தாண்டு காற்று மாசுபாடு கடந்தாண்டை விட 40% குறைந்துள்ளது

மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

அவ்வகையில் இந்த ஆண்டின் போகி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையில் பழைய பொருட்களை சேகரித்து தங்கள் வீடுகளின் முன்பு எரித்தனர்.

பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்த பழைய துணிகள், பாய்கள், தேவையில்லாத பொருட்களை வீட்டு வாசலில் தீ வைத்து எரித்தனர். சிறுவர்கள் கையில் மேளத்தை அடித்தபடி போகி பண்டிகையைக் கொண்டாடினர். இதனிடையே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்கள் எரிப்பதை தடுக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

காற்றை மாசுபடுத்தும் வகையில் போகியை கொண்டாடக் கூடாது என்பதில் பொது மக்களும் கவனமாக இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான இடங்களில் சம்பிரதாயத்திற்காக, ஒருசில பொருட்கள் மற்றும் தேவையற்ற மட்கும் குப்பைகளை மட்டுமே எரித்து போகியை கொண்டாடியதை காண முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிய அளவில் நெருப்பு மூட்டி போகியை கொண்டாடினர்.

சென்னையில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டதால் ஏற்பட்ட புகை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய காற்று மாசு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள செய்தியில்,

கடந்த ஆண்டு போகி பண்டிகையுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு காற்று மாசு குறைந்து காணப்பட்டது. காற்று மாசு குறைந்ததற்கு காரணம் பொதுமக்களிடையே இருந்த விழிப்புணர்வும், ஒத்துழைப்பும், பிளாஸ்டிக் மற்றும் பழைய பொருட்கள் எரிக்காமல் ஒத்துழைத்ததே  என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

.