This Article is From May 20, 2020

சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா நுண்கிருமி பரவ வாய்ப்புள்ளதா?

தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா நுண்கிருமி பரவ வாய்ப்புள்ளதா?

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 489 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையில் நேற்று மட்டும் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரித்துள்ளது

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து அதிக கொரோனா பாதிப்பு இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சென்னை நகரில்தான் அதிக பாதிப்பு உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி, கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வுர்வுப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா நுண்கிருமி பரவ வாய்ப்புள்ளதா என்கிற கேள்விக்கு, “சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா நுண்கிருமி பரவும் என்பதற்கான சான்றுகள் இதுவரை இல்லை.

எனினும், முன்கூட்டியே கவனமாக இருப்பது நல்லது.

ஒருவரின் சுவாச துகள்கள் படிந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால், சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்,” என்று தெளிவுபடுத்தி பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 552 பேர். ஒட்டுமொத்த அளவில் 12,448 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 489 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 4,895 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,466 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 84 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 
 

.