அவரின் காதல் என்னை ஆற்றுப்படுத்துகிறது -நடிகை அமலா பால்

எனது படங்களை பார்த்து விட்டு நடிக்கத் தெரியவில்லை என்று கூறினார். என் முடிவுகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்.அவரின் அன்புதான் என்னை ஆற்றுப்படுத்தியது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அவரின் காதல் என்னை ஆற்றுப்படுத்துகிறது -நடிகை அமலா பால்

அமலா பால் இண்ஸ்டாகிராம் புகைப்படம் (Image courtesy: amalapaul)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. நடிகை அமலாபால் தன் காதலிக்கும் நபரை பற்றி கூறியுள்ளார்.
  2. தான் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.
  3. அமலாபால் இயக்குநர் ஏ.எல் விஜயை 2016 இல் விவகாரத்து செய்துவிட்ட்டார்

நடிகை அமலாபால் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் கொடுத்த பேட்டியில் தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடனான காதல்தான் தன்னை ஆற்றுப்படுத்துகிறது என்று கூறியுள்ளார். 27 வயதான நடிகை அமலாபால் “நான் ஒருவரை விரும்புகிறேன். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டு இன்னொரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன்” என்று நேர்காணலில் தெரிவித்திருந்தார். “வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் நான் இப்போது மிகவும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறேன்” என்றும் தெரிவித்தார். 

பேட்டியில் “அவருடன் நான் ஆடை ஸ்கிரிப்டை பகிர்ந்து கொண்டேன். நான் எனக்குள் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். எனது படங்களை பார்த்து விட்டு நடிக்கத் தெரியவில்லை என்று கூறினார். என் முடிவுகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்.அவரின் அன்புதான் என்னை ஆற்றுப்படுத்தியது.

அமலா பால் 2014இல் இயக்குநர் ஏ.எல் விஜயை மணந்தார்.2016 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். ஏ.எல் விஜயின் அப்பா ஏ.எல். அழகப்பன் தமிழ் தொலைக்காட்சியான சத்தியம் டிவியில் அளித்த பேட்டியில் “திருமணத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் அமலா பால் நடித்து வருகிறார். இதனால் அவர்களுக்கிடையில் பிரச்னைகள் வந்தது. தற்போது அவர் நடித்து வருகிறார். எங்களுடைய யாரின் கருத்துகளையும் அமலாபால் கேட்கவில்லை. இது தொடர்பாக விஜய் என்ன பேசினான் என்று தெரியவில்லை. எங்களின் மகன் எங்களுக்கு முக்கியம். அவர்கள் இருவரும் விவகாரத்து செய்யப்போறது 100 சதவீதம் உண்மை” என்று கூறினார். மறுவருடம் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

ஆடை பட டீசரை கீழே பார்க்கலாம்:

ஆடை படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார். ஆடை படம் தற்போது வெளியாகியுள்ளது. சமந்தா மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் அமலா பாலின் தைரியமான முடிவை பாராட்டியுள்ளனர்.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................