This Article is From Aug 06, 2019

அரசியல் பேசும் அமலா பால் - 370வது சட்டப்பிரிவு ரத்தை ஆதரிக்கிறார்

அமலா பால் இதற்உ ஆதரவு தெரிவித்து இண்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் பேசும் அமலா பால் - 370வது சட்டப்பிரிவு ரத்தை ஆதரிக்கிறார்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை வரவேற்பதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.  

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பரிவான 370 ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலா பால் இதற்உ ஆதரவு தெரிவித்து இண்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

370பிரிவு சட்ட நீக்கத்தால் காஷ்மீரில் கல்வியும் பிற வளர்ச்சியும் ஏற்படும் என்றும் அமைதி நிலவும் என்று கூறியுள்ளார். இது எளிமையான ஒன்று அல்ல மாறாக தைரியமான முடிவுகள் எல்லாம் மோடியால் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

.