This Article is From Jan 24, 2019

டெல்லி அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து - 8 பேர் சிக்கியுள்ளனர்

Gurugram building collapse: இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அரியானா தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து - 8 பேர் சிக்கியுள்ளனர்

மீட்பு பணிகள் நடைபெற்று வரும் காட்சி.

Gurugram:

டெல்லி அருகே குருகிராமத்தில் 4 மாடி கட்டிடம் இன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அரியானா தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

உல்லாவாஸ் என்ற இடத்தில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இடிபாடுகளுக்குள் மாட்டியவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை தீயணைப்பு படையினர் கண்டறிந்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை.

காஜியாபாத் மற்றும் துவாரகாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க விரைந்துள்ளனர்

.